India A vs UAE Dream11 Prediction, Emerging Teams Asia Cup: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக அணியும் முதல் போட்டியில் ஓமன் அணிக்கு எதிரான அபார வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிகொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.  

Advertisement

IND A vs UAE: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
  • இடம் - அல் அமேரத் கிரிக்கெட் மைதானம், அல் அமேரத்
  • நேரம் - அக்.21 இரவு 7.00 மணி (இந்திய நேரப்படி)

IND A vs UAE T20I Pitch Report

இந்தியா - ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது அல் அமேரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 103 டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில் அதில் 43 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 59 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 148 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 220 ரன்களாக இருக்கிறது. இதனால் நிச்சயம் பேட்டர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

IND A vs UAE: Where to Watch?

Advertisement

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். மேற்கொண்டு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

India A vs UAE Probable Playing XI

India A Probable Playing XI: அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், திலக் வர்மா (கேப்டன்), ஆயுஷ் படோனி, நேஹல் வதேரா, நிஷாந்த் சிந்து, ரசிக் சலாம், ராகுல் சாஹர், அன்ஷுல் கம்போஜ், வைபவ் அரோரா.

Advertisement

UAE Probable Playing XI : தனிஷ் சூரி, மயங்க் ராஜேஷ் குமார், விஷ்ணு சுகுமாரன், ராகுல் சோப்ரா, சையத் ஹைதர் ஷா, பாசில் ஹமீத் (கேப்டன்), நீலன்ஷ் கேஸ்வானி, சஞ்சித் சர்மா, முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, ஓமித் ரெஹ்மான்.

IND A vs UAE T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பிரப்சிம்ரன் சிங், சையத் ஹைதர் ஷா
  • பேட்டர்கள் - தினீஷ் சூரி, நேஹால் வதேரா, திலக் வர்மா (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர் - அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), நிலான்ஷ் கேஸ்வானி
  • பந்துவீச்சாளர்கள் - ரசிக் சலாம், அன்ஷுல் கம்போஜ், முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா.

IND A vs UAE Dream11 Prediction, IND A vs UAE Dream11 Team, Fantasy Cricket Tips, IND A vs UAE Pitch Report, Today Cricket Match Prediction, Today Match Prediction, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India A vs UAE

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News