இந்திய ஏ அணியில் இடம்பிடிக்கும் கருண் நாயர், தனுஷ் கோட்டியான் - தகவல்!

Updated: Tue, May 13 2025 12:53 IST
Image Source: Google

ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை யார் நிரப்புவார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன. 

மேற்கொண்டு ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் சுதர்ஷன், கருண் நாயர், ரஜத் படிதார், ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 

இதில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மே 30 முதல் ஜூன் 2ஆம் தேதி வரையிலும், இரண்டாவது போட்டி ஜூன் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து இந்திய சீனியர் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி ஜூன் 13 முதல் 16ஆம் தேதி வரை விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய ஏ அணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இந்த அணியின் கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரன் தொடர்வார் என்றும், தனுஷ் கோட்டியன், பாபா இந்திரஜித், ஆகாஷ் தீப், கருண் நாயர், சாய் சுதர்ஷன் ஆகியோரும் ஏ அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுடான் துருவ் ஜூரெல் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோரும் தொடரின் ஆரம்பத்தில் இந்திய ஏ அணியில் இடம்பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. இருப்பினும் இந்த அணிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடிப்பாரா என்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது. 

Also Read: LIVE Cricket Score

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை