Full ICC Women’s T20 World Cup 2026 Schedule: அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஜூன் 14ஆம் தேதி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் 12 அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு இத்தொடர் நடைபெறவுள்ளாது. இதில் குருப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க், இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், குருப் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை அணிகளும் இடம்பிடித்துள்ளன. மற்ற அணிகள் தகுதிச்சுற்று அடிபடையில் தேர்வு செய்யப்படவுள்ளன. 

Advertisement

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. மொத்தம் 33 போட்டிகள் கொண்ட தொடரானது ஜூன் 12 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் நிலையில், இறுதிப் போட்டி ஜூலை 5 ஆம் தேதி லார்ட்ஸில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து முதல் அரையிறுதி போட்டி ஜூன் 30ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதி போட்டி ஜூலை 2ஆம் தேதியும் ஓவலில் நடைபெறவுள்ளது.

லார்ட்ஸ், ஓவல் மற்றும் எட்ஜ்பாஸ்டன் தவிர, ஓல்ட் டிராஃபோர்டு, பிரிஸ்டல் கவுண்டி மைதானம் மற்றும் ஹாம்ப்ஷயர் பவுல் உள்ளிட்ட மைதானங்களும் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தவுள்ளன. மேலும் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன நிலையில், ஜூன் 14 தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

மகளிர் டி20 உலகக் கோப்பை 2025 முழு அட்டவணை

  • ஜூன் 12: இங்கிலாந்து vs இலங்கை, எட்ஜ்பாஸ்டன்
  • ஜூன் 13: தகுதிச் சுற்று vs தகுதிச் சுற்று, ஓல்ட் டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம் 
  • ஜூன் 13: ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா, ஓல்ட் டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம் 
  • ஜூன் 13: மேற்கிந்திய தீவுகள் vs நியூசிலாந்து, ஹாம்ப்ஷயர் பவுலிங்
  • ஜூன் 14: தகுதிச் சுற்று v தகுதிச் சுற்று, எட்ஜ்பாஸ்டன்
  • ஜூன் 14: இந்தியா v பாகிஸ்தான், எட்ஜ்பாஸ்டன்
  • ஜூன் 16: நியூசிலாந்து v இலங்கை, ஹாம்ப்ஷயர்
  • ஜூன் 16: இங்கிலாந்து v தகுதிச் சுற்று, ஹாம்ப்ஷயர்
  • ஜூன் 17: ஆஸ்திரேலியா v தகுதிச் சுற்று, ஹெடிங்லி
  • ஜூன் 17: இந்தியா v தகுதிச் சுற்று, ஹெடிங்லி
  • ஜூன் 17: தென்னாப்பிரிக்கா v பாகிஸ்தான், எட்ஜ்பாஸ்டன்
  • ஜூன் 18: மேற்கிந்திய தீவுகள் v தகுதிச் சுற்று, ஹெடிங்லி
  • ஜூன் 19: நியூசிலாந்து v தகுதிச் சுற்று, ஹாம்ப்ஷயர் பவுலிங்
  • ஜூன் 20: ஆஸ்திரேலியா v தகுதிச் சுற்று, ஹாம்ப்ஷயர் பவுல்
  • ஜூன் 20: பாகிஸ்தான் v தகுதிச் சுற்று, ஹாம்ப்ஷயர் பவுல்
  • ஜூன் 21: இங்கிலாந்து v தகுதிச் சுற்று, ஹெடிங்லி
  • ஜூன் 21: மேற்கிந்திய தீவுகள் v இலங்கை, பிரிஸ்டல் கவுண்டி மைதானம் 
  • ஜூன் 21: தென்னாப்பிரிக்கா v இந்தியா, ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானம்
  • ஜூன் 23: நியூசிலாந்து v தகுதிச் சுற்று, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
  • ஜூன் 23: இலங்கை v தகுதிச் சுற்று, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
  • ஜூன் 23: ஆஸ்திரேலியா v பாகிஸ்தான், ஹெடிங்லி 18:30 உள்ளூர் நேரம்
  • ஜூன் 24: இங்கிலாந்து v மேற்கிந்திய தீவுகள், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
  • ஜூன் 25: இந்தியா v தகுதிச் சுற்று, ஓல்ட் டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம்
  • ஜூன் 25: தென்னாப்பிரிக்கா v தகுதிச் சுற்று, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
  • ஜூன் 26: இலங்கை v தகுதிச் சுற்று, ஓல்ட் டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம்
  • ஜூன் 27: பாகிஸ்தான் v தகுதிச் சுற்று, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
  • ஜூன் 27: மேற்கிந்திய தீவுகள் v தகுதிச் சுற்று, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
  • ஜூன் 27: இங்கிலாந்து v நியூசிலாந்து, தி ஓவல்
  • ஜூன் 28: தென்னாப்பிரிக்கா v தகுதிச் சுற்று, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
  • ஜூன் 28: ஆஸ்திரேலியா v இந்தியா, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
  • ஜூன் 30: டிபிசி v டிபிசி (அரையிறுதி 1), தி ஓவல்
  • ஜூலை 2: டிபிசி v டிபிசி (அரையிறுதி 2), தி ஓவல்
  • ஜூலை 5: டிபிசி vs டிபிசி (இறுதிப்போட்டி), லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News