தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று சென்சூரியனில் தொடங்கியது. இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறிய நிலையில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் அரை சதம் கடந்து 70* ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார்.

Advertisement

இந்நிலையில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். குறிப்பாக வித்தியாசமான பவுலிங் ஆக்சனை பயன்படுத்தி துல்லியமான யார்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திண்டாட வைக்கும் பும்ரா இந்திய அணியின் முக்கிய விரராக இருப்பதாக நிடினி பாராட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “பும்ரா பந்தை எங்கே ரிலீஸ் செய்கிறார் என்பதை பாருங்கள். அவர் பந்தை தம்முடைய தலையின் டாப் பகுதியில் இருந்து ரிலீஸ் செய்கிறார். எனவே பந்தை பின்னோக்கி இழுப்பதற்கான கோணத்தை அவர் எளிதாக பெறுகிறார். அதே சமயம் பிட்ச் செய்த பின் அவரால் பந்தை நேராகவும் வீச முடியும். 

அவரிடம் வலுவான மணிக்கட்டுகள் இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால் அவருடைய பவுலிங் ஆக்சன் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதுவே அழகை சேர்க்கிறது. அவருடைய யார்கர்கள் எப்போதும் தப்புவதில்லை. அவரின் இது போன்ற திறமைகளை அனைவரும் பார்த்து மகிழ்கின்றனர். என்னைப் பொறுத்த வரை பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது” என்று கூறியுள்ளார்.

அதேசம்யம் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா குறித்து பேசிய நிடினி, “ரபடா மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் சிறப்பாக பந்து வீசினார். அவரால் 400 விக்கெட்டை தாண்டி சாதனைகளை படைக்க முடியும். ஆனால் வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும். தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News