England vs India 1st Test:ஹெடிங்லே நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையிலும் மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

Advertisement

ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், டங்க் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் 106 ரன்களையும், ஹாரி புரூக் 99 ரன்களையும், பென் டக்கெட் 62 ரன்களையும் சேர்க்க அந்த அணி 465 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளர். அதன்படி இப்போட்டியில் 20 ஓவர்கள் வீசிய அவர், 6.40 என்ற எகானமியில் 128 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஓலி போப், ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 6 க்கும் மேற்பட்ட எகானமி விகிதத்தில் பந்துவீசிய இந்திய வீரர் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2004 ஆம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில், சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் 6 க்கும் மேற்பட்ட எகானமியில் 122 ரன்கள் விட்டுக்கொடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் பிரஷித் கிருஷ்ணா 128 ரன்களைக் கொடுத்து மோசமான சாதனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக ரன்களை கொடுத்த இந்திய வீரர்கள் (6+ எகானமி)

  • 128 - பிரசித் கிருஷ்ணா v இங்கிலாந்து- லீட்ஸில் (2025)*
  • 122 - முரளி கார்த்திக் v ஆஸ்திரேலியா- சிட்னியில் (2004)
  • 108 - அதுல் வாசன் v நியூசிலாந்து- ஆக்லாந்தில் (1990)
  • 98 - முகமது சிராஜ் v இங்கிலாந்து- பர்மிங்காமில் (2022)
  • 96 - ஸ்ரீசாந்த் v வெஸ்ட் இண்டீஸ்​​- செயிண்ட் ஜான்ஸ் (2006)
Advertisement

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, ஷோயப் பஷீர்.

Also Read: LIVE Cricket Score

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News