தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியாஅனது நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், தீவிர பயிற்சிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். அதன்படி இப்போட்டிக்கான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் இடம் பிடிப்பார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த அவர், அதன்பின் கிட்டத்திட்ட இரண்டு மாதம் காலம் ஓய்வில் இருந்தார். பின்னர் அவர் ரஞ்சி கோப்பை தொடரின் மூலம் அவர் ஃபார்முக்கு திரும்பினார்.
மேற்கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்க தொடக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், அணியின் துணைக்கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இப்போட்டிக்கான இந்திய அணியின் லெவனில் நேரடியாக இடம் பிடிப்பார்.
இந்திய அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான 24 வயதான துருவ், கொல்கத்தா டெஸ்டுக்கான இந்தியாவின் விளையாடும் லெவனில் இடம் பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஏனெனில் அவர் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சதங்கள் உள்பட 259 ரன்களைச் சேர்த்து அபாரமான ஃபார்மை தொடர்கிறார் இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பும் உள்ளது.
மேலும் இத்தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பிடிப்பார்கள். அணியின் மூன்றாம் வரிசையில் சாய் சுதர்ஷனுக்க்கு மற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். மேற்கொண்டு கேப்டன் ஷுப்மன் கில் நான்காம் இடத்திலும், ரிஷப் பந்த் ஐந்தாம் இடத்திலும், துருவ் ஜூரெல் ஆறாம் இடத்திலும் களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்தியாவின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். இதில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங்கிலும் அணிக்கு பங்களிக்க முடியும். இதுதவிர அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளனர்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் பாடிக்கல், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.