இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிகள் ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசலாவில் நடைபெற உள்ளது. 

Advertisement

இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் தனது பாஸ்பால் யுக்தியை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் இந்த யுக்தி கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் இங்கிலாந்து தொடர்ந்து அதே யுக்தியை பயன்படுத்தி வருகிறது. அந்த யுக்தியின் மூலம் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியின் பாஸ்பால் யுக்திக்கு பெரும் சவால் எழ உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்து அணியின் பாஸ்பால் யுக்திக்கான அடுத்த சவால் உருவாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இங்கிலாந்து அணிக்கு இந்த சுற்றுப்பயணம் மிகப் பெரிய சவாலாக அமையப் போகிறது. இந்த முறை இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்தி இந்தியாவின் வலிமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் சுழலை எதிர்த்து பேஸ்பால் யுக்தி எவ்வாறு செயல்பட போகிறது என்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கப் போகிறது. இங்கிலாந்திலும் ஜேக் லீச் மற்றும் ரீகன் அகமது போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஜோஸ் டங் சிறப்பாக பந்து வீசுகிறார். ஒல்லி ராபின்சன் மிகுந்த திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News