அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

Updated: Mon, Jan 06 2025 13:07 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. 

இதனையடுத்து இந்திய மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயர்லாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணியில் வழக்கமான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்தொடரில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஸ்மிருதி மந்தனா இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இத்தொடரில் அணியின் துணைக்கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

மேற்கொண்டு இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலக்கை ஹர்லீன் தியோல் தனது இடத்தை உறுதிபடுத்தியுள்ளார். மேலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், டைட்டாஸ் சாது, பிரதிகா ராவல் உள்ளிட்டோரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். அதேசமயம் இத்தொடரிலும் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மாவுக்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய மகளிர் ஒருநள் அணி: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டைட்டாஸ் சாது, சைமா தாக்கூர், சயாலி சத்கரே

Also Read: Funding To Save Test Cricket

இந்தியா - அயர்லாந்து மகளிர் ஒருநாள் தொடர்

  • ஜனவரி 10 - முதல் ஒருநாள் போட்டி - ராஜ்கோட்
  • ஜனவரி 12 - இரண்டாவது ஒருநாள் போட்டி - ராஜ்கோட்
  • ஜவரின் 15  - மூன்றாவது ஒருநாள் போட்டி - ராஜ்கோட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை