இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் நேற்று மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலிஅயில் இரு அணிகளும் மோதும் 2ஆவது ஒருநாள் போட்டி நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
- இடம் - விசாகப்பட்டினம்
- நேரம் - மதியம் 1.30 மணி
போட்டி முன்னோடம்
இந்திய அணி ஏற்கெனவே முதல் போட்டில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் களமிறங்குகிறது. கடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்ட நிலையில், டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பினர். இருப்பினும் இறுதிக்கட்டத்தில் ஃபார்முக்கு திரும்பிய கேஎல் ராகுல் அணியை வெற்றியடைய செய்தார். அவருடன் ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் அசத்தினார்.
பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலிய பேட்டர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினர். அவர்களுடன் ஷர்துல், குல்தீப், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பேட்டிங்கில் விராட் கோலி நாளைய போட்டியில் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மேலும் முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோஹித் சர்மா நாளைய போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி படுமட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் ஷான் மார்ஷை தவிற மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், லபுசாக்னே என நட்சத்திர பேட்டர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பந்துவீச்சு துறையில் மிட்செல் ஸ்டார் அபாரமாக பந்துவீசி இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தார். அவருடன் கேமரூன் க்ரீன், ஆடம் ஸாம்பா, சீன் அபெட் ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி தோல்வியிலிருந்து மீளும். நாளைய போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு போராடும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 144
- இந்தியா - 54
- ஆஸ்திரேலியா 80
- முடிவில்லை - 10
உத்தேச லெவன்
இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர்/டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் (கே), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
- பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், விராட் கோலி, ஷுப்மான் கில், மிட்செல் மார்ஷ்
- ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, கிளென் மேக்ஸ்வெல்
- பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.