டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் ஆகியோர் வழக்கம் போல் இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தனர்.

Advertisement

அதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்தையும் சிதறடித்த அலெக்ஸ் ஹேல்ஸ் – ஜாஸ் பட்லர் ஜோடி, பவர்ப்ளே ஓவர்களிலேயே 63 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை இலகுவாக்கியது.

புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி என அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் துவம்சம் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜோடி விக்கெட்டையும் விட்டுகொடுக்காமல் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 16வது ஓவரிலேயே இலக்கை மிக மிக இலகுவாக எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும், பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணிக்கு எதிரான இந்த மிரட்டல் வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி, 13ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான இந்திய அணி மோசமான தோல்வியால் வேதனையடைந்த ரோஹித் சர்மா கண் கலங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News