India vs Pakistan Dream11 Prediction Match 18, T20 World Cup 2024: ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. அரசியல் காரணங்களினால் இவ்விரு அணிகளும் ஐசிசி தொடர்களை கடந்த மற்ற எந்த போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பதால் ஒவ்வொரு முறையும் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்புகள் இருக்கும். அதிலும் உலகக்கோப்பை தொடர் என்றால் அதற்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இதனால் நாளைய போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

IND vs PAK: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
  • இடம் - நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம், நியூயார்க்
  • நேரம் - ஜூன் 09ஆம் தேதி, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

IND vs PAK Pitch Report

நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் குறித்த விமர்சனங்கள் மேலோங்கியுள்ளன. ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த மைதானத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் நிலையற்ற பவுன்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதால் இது பேட்டர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பிட்சாக இருந்து வருகிறது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகளும் நீளமானது என்பதால் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறி வருகின்றனர். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இந்த மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். 

IND vs PAK T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 12
  • இந்தியா - 09
  • பாகிஸ்தான் - 03
  • முடிவில்லை - 00

IND vs PAK: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

India vs Pakistan Probable Playing XI

இந்தியா அணியின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே/சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல்/குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

Advertisement

பாகிஸ்தான் அணியின் உத்தேச லெவன்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), உஸ்மான் கான், ஃபகர் ஸமான், ஷதாப் கான், அசம் கான், இப்திகார் அகமது, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா, முகமது அமீர்.

IND vs PAK T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான், ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, பாபர் அசாம், ரோஹித் சர்மா
  • ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷதாப் கான்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஷஹீன் அஃப்ரிடி, முகமது அமீர், அர்ஷ்தீப் சிங்.

IND vs PAK Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match IND vs PAK, IND vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs PAK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Pakistan

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News