முத்தரப்பு டி20 தொடர்: விண்டீஸை பந்தாடியது இந்திய மகளிர் அணி!

Updated: Mon, Jan 30 2023 21:57 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் கேப்டன் ஹீலி மேத்யூஸ் 34 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மற்ற வீராங்கனைகள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்திரேகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 5 ரன்னிலும், ஹர்லீன் டியோல் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஹர்மன்ப்ரீத் கவுர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 32 ரன்களையும் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 13.5 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை