இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பும்ரா தலைமையிலான மெயின் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

Advertisement

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து கவுண்டி அணியுடன் இரண்டு பயிற்சி டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற டெர்பிஷையர் அணியுடனான முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷையர் அணியின் தொடக்க வீரர் ரீஸ் ஒரு ரன்னிலும், கேப்டன் மசூத் 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த மேட்சன் 28, லுஸ் 9, கேட்ரைட் 27, ப்ரூக் கெஸ்ட் 23, அலெக்ஸ் ஹூக்ஸ் 24 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெர்பிஷையர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணியில் வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - தீபக் ஹூடா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் சஞ்சு சாம்சன் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக விளையாடிய சூர்யகுமார் யாதவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

Advertisement

இதன்மூலம் இந்திய அணி 16.4 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் டெர்பிஷையர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News