இந்தியா - அயர்லாந்து அணிகள் முதல் டி 20இல் இன்று மோதல்!

Updated: Sun, Jun 26 2022 11:24 IST
India’s Playing XI vs Ireland For 1st T20I; Likely Debuts For Umran Malik, Arshdeep Singh, Rahul Tew (Image Source: Google)

அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. 

இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 ஆட்டம் டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த இருப்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகம் உள்ளது. 

பேட்டிங்கில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தினேஷ் காத்திக்கும், பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேலும் வலுசேர்க்கிறார்கள். 

இந்திய அணியில் ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் புதிதாக இடம் பிடித்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு ஆடும் 11 பேர் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

அயர்லாந்து அணி ஆண்டி பால்பிர்னி தலைமையில் களமிறங்குகிறது. டாக்ரெல், பால் ஸ்டெர்லிங், கேம்பெர் என அனுபவ வீரர்களும் அணியில் உள்ளனர். தவிர சொந்த மண் என்பதால் அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடாமல் சவால் கொடுக்க முயற்சிக்கும்.

உத்தேச அணி

அயர்லாந்து - பால் ஸ்டிர்லிங், ஆண்டி பால்பிர்னி (கே), கரேத் டெலானி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஸ்டீபன் டோஹனி, ஆண்டி மெக்பிரைன், கர்டிஸ் கேம்பர், மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, ஜோஷ் லிட்டில்

இந்தியா - ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், ஹர்திக் பாண்டியா (கே), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை