டி20 உலகக்கோப்பை : இரு நட்சத்திர வீரர்கள் இடம்பெறுவது உறுதி!

Updated: Wed, Sep 08 2021 14:48 IST
India's T20 World Cup squad: The top contenders (Image Source: Google)

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மிகப்பெரிய டி20 உலகக் கோப்பைத் தொடரில் 16 அணிகள் கலந்துகொள்ள இருக்கின்றன.

அதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில் 4 அணிகள் தகுதி சுற்று முடிவின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்னும் உலக கோப்பை தொடர் துவங்க இடையில் ஒரு மாதமே உள்ளதால் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் அனைத்தும் தங்களது கிரிக்கெட் அணியின் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் தங்களது அணியை அறிவித்து விட்ட நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜெய்ஷா தலைமையில் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அதாவது இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் இந்த அணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விராட்கோலி தலைமையிலான இந்த அணியில் 18 முதல் 20 வீரர்கள் இருக்கலாம் என்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்தில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் நிச்சயம் இந்த அணியில் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தேர்வு செய்வதிலும் பிசிசிஐ நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. மேலும் ஐபிஎல் தொடரில் கலக்கிய ராகுல் சஹார், சேத்தன் சக்காரியா உள்ளிடோரும் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை