இந்தியா - வங்கதேசம்  அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

Advertisement

இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 

Advertisement

அதன்படி வங்கதேச டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 5ஆம் இடத்திற்கும், சதமடித்து அசத்திய ரிஷப் பந்த் 6ஆம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். அதேசமயம் வங்கதேச டெஸ்ட் தொடரில் சோபிக்க தவறிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 5 இடங்கள் சரிந்து 10ஆம் இடத்திற்கும், விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 12ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். 

இதுதவிர இப்போட்டியில் சதமடித்த ஷுப்மன் கில் 5 இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேற்கொண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 06ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

மேற்கொண்டு டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். மேற்கொண்டு வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் தனது மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் 6ஆம் இடத்தில் நீடித்து வருகிறார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News