இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ர கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் உமா சேத்ரி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

Advertisement

அதேசமயம் மறுபக்கம் விளையாடிய உமா சேத்ரி 4 ரன்னில் விக்கெட்டி இழக்க, அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 13 ரன்னிலும், ராகவி பிஸ்ட் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தீப்தி சர்மா 17 ரன்களுக்கும், சஜீவன் சஜனா 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிச்சா கோஷ் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், கடைசி ஓவரில் ராதா யாதவும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.அதன்பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவறினர். இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சின்னலே ஹென்றி, டியாண்டிரா டோட்டின், ஹீலி மேத்யூஸ் மற்றும் அஃபி ஃபிளெட்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களை எடுத்திருந்த கியானா ஜோசப் தனது விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீலி மேத்யூஸ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 17 பவுண்டரிகளை விளாசி 85 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய் ஷெமைன் காம்பெல் 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் மகளிர் அணி 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News