இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. 

Advertisement

இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் கடைசி போட்டியானது இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் உமா சேத்ரி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் உமா சேத்ரி 2 ஆவது பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் நடப்பு டி20 தொடரில் அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 39 ரன்களில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். 

அதன்பின்னரும் அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என 77 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து இணைந்த ராகவி பிஸ்ட் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிச்சா கோஷும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 54 ரன்களில் ரிச்சா கோஷ் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகவி பிஸ்ட் 31 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களைக் குவித்தது. 

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் ஹீலி மேத்யூஸ் - கியானா ஜோசப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் கியானா ஜோசப் 11 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து டியாண்டிரா டோட்டின் 25 ரன்களிலும், ஷெமைன் காம்பெல் 17 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் களமிறங்கிய சினெல்லே ஹென்றி அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 43 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News