CT2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய பும்ரா; ரானா, வருணுக்கு வாய்ப்பு!

Updated: Wed, Feb 12 2025 08:32 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிகெட் தொடர் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. 

இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை இறுதி செய்ய இன்றே கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து அணிகளும் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இறுதி செய்யப்பட்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. இதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டியின் போது காயமடைந்த பும்ரா, அதன்பின் தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம்பிடித்திருந்த நிலையில், திடிரென அத்தொடரில் இருந்தும் விலகினார். அப்போதே அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்திருந்தன. 

இந்நிலையில் பும்ரா தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் சாம்பியன்ஸ் தொடரில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இதனையடுத்து அவருக்கு மாற்றாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு முன்னதாக இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு, ரிஸர்வ் வீரர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதில் பெரிதளவில் சோபிக்க தவறினார். இதன் காரணமாக தற்போது அவர் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக மற்றொரு நட்சத்திர வீரர் வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதிசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.

Also Read: Funding To Save Test Cricket

ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை