ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் சதமடித்து அசத்தியதுடன் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 118 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 54 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 85 ரன்களையும், மயங்க் அகர்வால் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த், “கடைசியில் நீங்க 40 ஓவர்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டியதாயிடுச்சு. 20 ஓவர்கள் நிச்சயம் ஒரு டி20 ஆட்டத்தில் உங்களை காப்பாற்றாது. இத்தொடருக்கு முன்னதாக நிறைய காயம் பற்றிய கவலைகள் இருந்தன, அதுதான் சீசன் முழுக்க எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் எனது ஃபார்ம் குற்றித்த கேள்விகள் இருந்தன. ஆனாலும் ஒவ்வொரு போட்டியிலும் நான் சிறப்பாக செயல்பட முயற்சித்தேன்.

Also Read: LIVE Cricket Score

இருப்பினு சில நேரங்களில் அது சரியாக அமையவில்லை. இன்று நான் நன்றாகத் தொடங்கினால், நானும் ஒரு பெரிய போட்டியை விளையாட வேண்டும் என்று உறுதி செய்தேன். அதற்கேற்றவாறு இன்று என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது. நீங்கள் ஒரு தொடக்கத்தைப் பெறும்போதெல்லாம், அதை முடிந்தவரை பெரியதாக மாற்ற முயற்சிக்க வேண்டும். அதனைதான் நான் இன்று மைதானத்தில் விளையாட முயற்சித்தேன். ஒவ்வொரு பந்தையும் அதே தீவிரத்துடன் விளையாடினேன், இன்னிங்ஸ் முழுவதும் அதனை பின்பற்றினேன்” என்று கூறிவுள்ளாஅர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News