ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Sat, Apr 24 2021 20:26 IST
IPL 2021, CSK v RCB, Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசனில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மாலை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம்: வான்கேடே மைதானம், மும்பை
  • நேரம் : மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் நடப்பு சீசனில் இரு அணிகளும் நல்ல ஃபார்மில் இருப்பதால் நாளைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அதிலும் இரு அணிகளிலும் அதிரடியான பேட்ஸ்மேன்கள் இருப்பதினால் நாளைய போட்டியில் பவுண்டரிகளுக்கு பஞ்சமிருக்கது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

நேருக்கு நேர்

இதுவரை ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 முறையையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 முறையையும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது.

உத்தேச அணி
சிஎஸ்கே:
ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, டூ பிளெசிஸ், எம்.எஸ்.தோனி, மொயீன் அலி, சாம் கரன், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்.

ஆர்சிபி: விராட் கோலி, தேவ்தத் படிகல், சபாஷ் அஹ்மத், கிளென் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர்,கெய்ல் ஜெமிசன்,கேன் ரிச்சர்ட்சன், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

பிளிட்ஸ்பூல் பேண்ட்ஸி லெவன் குறிப்பு

  • விக்கெட் கீப்பர்கள் : ஏபிடி வில்லியர்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் :  விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயூடு
  • ஆல்ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா
  • பவுலர்கள்: ஹர்செல் பட்டேல், தீபக் சஹார், முகமது சிராஜ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை