ஐபிஎல் திருவிழா 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Tue, Apr 27 2021 12:48 IST
IPL 2021, DC v RCB– Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (CRICKETNMORE)

ஐபிஎல் போட்டியின் 22ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று 7.30 மணிக்கு மோதுகின்றன. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும்  5 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், தலா 4 வெற்றிகளுடன் சமபலத்தில் உள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம்: நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
  • நேரம்: இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

பெங்களூரைப் பொறுத்தவரை சீசன் தொடக்கம் முதல் தோல்வியே சந்திக்காமல் வந்து, கடைசி ஆட்டத்தில் சென்னையிடம் தோற்றது. எனவே, இந்த ஆட்டம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப ஆர்சிபி அணி முயற்சிக்கும். பேட்டிங்கில் கோலி - படிக்கல் கூட்டணி நல்ல தொடக்கத்தை வழங்கிவருகிறது. மிடில் ஆா்டரில் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் சிறப்பான ஃபார்மில் இருப்பதால், அணியின் பேட்டிங் வரிசை வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 

பவுலிங்கில் ஹர்ஷல் படேல், சிராஜ் ஆகியோர் எதிரணியை திணறடித்தாலும், சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்ஷல் படேலின் ஓவரில் ஜடேஜா 37 ரன்கள் குவித்தார். கடந்த ஆட்டத்தை மறந்து பார்த்தால் இதுவரை பெங்களூரு பவுலிங் சிறப்பாகவே இருந்தது. மேலும் சஹால், ஜேமிசன் ஆகியோர் அணியின் கூடுதல் பலமாகவே இருக்கிறார்கள்.

டெல்லியைப் பொறுத்தவரை, கடைசி 3 ஆட்டங்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களம் காணவுள்ளது. தொடக்க வீரா்களான பிருத்வி ஷா, தவன் நல்ல பார்மில் உள்ளனர். மிடில் ஆா்டரிலும் கேப்டன் பன்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ் என வலுவான வீரா்கள் வரிசையில் இருக்கின்றனர். அஸ்வின் இல்லாத நிலையில் பவுலிங்கில் அக்ஸர் படேல், அமித் மிஸ்ரா ஆகியோருக்கான பொறுப்பு அதிகரிக்கிறது. 

வேகப்பந்துவீச்சில் அவேஷ் கான், ககிசோ ரபாடா ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கின்றனர். சமபலம் கொண்ட இரு அணிகளும் மோதும் இன்றையப் போட்டி சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 முறையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

உத்தேச அணி

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷாப் பந்த், சிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்சர் படேல்,லலித் யாதவ், ககிசோ ரபாடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, தேவதத் படிக்கல், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், கெய்ல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்
 

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பாந்த், டி வில்லியர்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் - கிளென் மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல், பிரித்வி ஷா, விராட் கோலி
  • ஆல்ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்சர் படேல்
  • பந்து வீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை