கரோனா தொற்றால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த வாரமே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் ஐபிஎல் 14ஆவது சீசனின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டது. இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.

இதற்கிடையில் நடப்பு சீசனின் தொடக்கத்தில் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியதை அடுத்து, ரிஷப் பந்த் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரும் காயத்திலிருந்து மீண்டுள்ளதால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தில் எழத்தொடங்கியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News