ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சு!

Updated: Tue, Apr 27 2021 19:12 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 

இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஆர்சிபி அணியில் நவ்தீப் சைனிக்கு பதிலாக ராஜட் படிதரும், டேனியல் கிறிஸ்டியனுக்கு பதிலாக டேனியல் சாம்ஸும் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷாப் பந்த், சிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்சர் படேல்,ககிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, தேவதத் படிக்கல், ராஜட் படிதர், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், டேனியல் சாம்ஸ், கெய்ல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை