ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த சுப்மன் கில் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பின் 56 ரன்களோடு அவரும் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் தினேஷ் கார்த்திக் - ஈயான் மோர்கன் இணை ஒரு சில பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 56 ரன்களைச் சேர்த்தார்.