நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள மேக்ஸ்வெல் 176 ரன்களை குவித்துள்ளார். அவரது ஆட்டம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு பெரிதும் கை கொடுத்துள்ளது. 

Advertisement

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் சரியான அணி. அதனால் தான் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய வாகன், “கடந்த சீசன்களில் சரிவர ஆட தவறி இருந்தாலும் மேக்ஸ்வெல்லுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் சரியான அணி. அதனால் தான் அவர் சிறப்பான ஆட்டத்தை நடப்பு சீசனில் வெளிப்படுத்தி வருகிறார். அதற்கு காரணம் பெங்களூரு அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் உள்ளனர். அதனால் மேக்ஸ்வெல் மீது அதிக கவனமும், எதிர்பார்ப்பும் இல்லை. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மேக்ஸ்வெல் திறம்பட விளையாடி வருகிறார்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேக்ஸ்வெல் இதற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News