ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 47ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் இணை வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஃபாஃப் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி ஆகியோர் ராகுல் திவேத்தியா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் 101 ரன்களுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ராகுல் திவேத்தியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News