ஐபிஎல் திருவிழா 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Tue, May 04 2021 11:24 IST
Image Source: Google

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. 

இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் 
  • இடம் : அருண் ஜெட்லி மைதானம், டெல்லி 
  • நேரம் : இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. 

இந்நிலையில் நடப்பு சீசனின் ரிவால்வரி போட்டியில் இரு அணிகளும் இன்று பலப்பரீட்சையில் நடத்துகிறது.

அதிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பாண்டு சீசனில் படுமோசமான தோல்விகளை சந்தித்து, புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றி பாதைக்கும் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரை சென்னை அணியுடனான த்ரில் வெற்றி பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனால் பந்துவீச்சாளர்கள் சரிவர சோபிக்காதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நேருக்கு நேர் 

ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 17 போட்டிகளில் விளையாடிவுள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணி 8 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 9 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

உத்தேச அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், முகமது நபி / ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், ராகுல் சாஹர், தவால் குல்கர்னி, ஜஸ்பிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள்: ஜானி பேர்ஸ்டோவ், டி கோக்
  • பேட்ஸ்மேன்கள் : ரோஹித் சர்மா, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா, அப்துல் சமத்.
  • ஆல்ரவுண்டர்கள் : பொல்லார்ட்
  • பந்து வீச்சாளர்கள் : ராகுல் சாஹர், ரஷீத் கான், ட்ரெண்ட் போல்ட்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை