ஐபிஎல் 2021: ரபாடா, அக்சர் படேல் பந்துவீச்சில் சுருண்ட ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 33ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சஹா - வில்லியம்சன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் தலா 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து வந்த மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 90 ரன்களுக்குள்ளாகவே ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த அப்துல் சமத் - ரஷித் கான் இணை அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டத்து. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதில் அதிகபட்சமாக ரன்களைச் சேர்த்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.