ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி போட்டியின் முதல் ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

Advertisement

ஆனால் தனது இரண்டாவது ஓவரை வீசிய புவனேஷ்வர், அதிரடியாக விளையாட தொடங்கிய சுப்மன் கில்லை 7 ரன்களுக்கு வெளியேற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து வந்த சாய் சுதர்ஷன் 11 ரன்கள் சேர்த்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா - மேத்யூ வேட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறுக சிறுக ஸ்கோரை உயர்த்தியது. அதன்பின் 19 ரன்களில் மேத்யூ வேட் ஆட்டமிழக்க, 12 ரன்களில் டேவிட் மில்லரும் விக்கெட்டை இழந்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அபிநவ் மனோகார் அதிரடியாக விளையாடி மளமளவென் ஸ்கோரை உயர்த்தினார். பின் 35 ரன்கள் சேர்த்திருந்த அபிநவ் மனோகர் ஆட்டமிழந்தார். 

மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News