ஐபிஎல் 2022: ராணா அரைசதத்தால் தப்பிய கேகேஆர்; டெல்லிக்கு 147 டார்கெட்!

Updated: Thu, Apr 28 2022 21:22 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

வான்கடேவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆரோன் ஃபிஞ்ச் 3 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 6 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அடுத்து களமிறங்கிய பாபா இந்திரஜித், சுனில் நரைன் ஆகியோர் குல்தீப் யாதவின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதே ஓவரில் ஆண்ட்ரே ரஸ்ஸலும் குல்தீப் யாதவிடம் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய நிதீஷ் ராணா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், அணியை சவாலான இலக்கை நிர்ணயிக்கவும் உதவினார். அவருடன் இணைந்து ரிங்கு சிங்கும் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசினார்.

இறுதியில் முஸ்தபிசூர் ரஹ்மான் விசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 23 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா 57 ரன்களிலும், டிம் சௌதி முதல் பந்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை