16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 41ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றுவ்ரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் டெவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் 37 ரன்களைச் சேர்த்த நிலையில் சிக்கந்தர் ரஸா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெவான் கான்வே அரைசதம் கடந்து அசத்தினார். இதற்கிடையில்  ரஹானே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிவம் தூபே களமிறங்கி 2 இமாலய சிக்சர்களை பறக்கவிட்ட கையோடு 28 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அடுத்து வந்த மொயீன் அலியும் 10 ரன்களோடு வெளியேற அணியின் ஸ்கோர் வேகமும் மந்தமானது. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 12 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவான் கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சர் என 92 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இறுதியாக சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது பங்கிற்கு அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு ஃபினீஷிங்கை கொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைக் குவித்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News