16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கள் நடைபெறவுள்ளன.  இந்நிலையில், இந்த சீசனில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதேசமயம் தோல்வியடையும் அணி இரண்டாவது குவாலிஃபைர் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும். ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய 3 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றிபெற்றுள்ளது. 

Advertisement

இதனால் இந்த முறை வரலாற்றை மாற்றி குஜராத் அணியை சிஎஸ்கே தோற்கடித்து வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இதுவரை 9 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிஎஸ்கே 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்பது நாளை தெரிந்து விடும். 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சேப்பாக்கம், சென்னை 
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதிலும் குறிப்பாக அந்த அணி விளையாடிய 14 லீக் போட்டிகளில் 10 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் மட்டுமே சந்தித்து வலிமைமிக்க அணியாக திகழ்கிறது.

Advertisement

அதே பலத்துடன் தற்போது பிளே ஆஃப் சுற்றையும் எட்டியுள்ள அணி நிச்சயம் தங்களது இரண்டாவது கோப்பைக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில், ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, விஜய் சங்கர், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், தசுன் ஷனகா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான் அகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.

அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி, மோஹித் சர்மா, ரஷித் கான், நூர் அஹ்மத் ஆகியோர் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு எதிரணி பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றனர். அவர்களுடன் யாஷ் தயாள், தசுன் ஷனகா, அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும் 12ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததுடன்,  5ஆவது கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதிலும் கேப்டன் தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதால் சிஎஸ்கே மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையில் டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து டாப் ஆர்டரில் அபாரமாக செயல்பட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர். மிடில் ஆர்டரில் சிக்ஸர் தூபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ஃபினீஷிங்கை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மொயீன் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர்களும் தங்களது ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் சிஎஸ்கேவின் பேட்டிங்  பலமும் அதிகரிகரிக்கும். பந்துவீச்சில் தீபக் சஹார், மதீஷா பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோர் உள்ளனர். இதில் பதிரானா, ஜடேஜா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அதிகளவில் ரன்களை வாரி வழங்குவதால் அவர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இரு அணிகளும் சமபலத்துடன் மோதவுள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • குஜராத் டைட்டன்ஸ் - 03
  • சென்னை சூப்பர் கிங்ஸ்  - 00

ஐபிஎல் கோப்பைகள்

  • ஐபிஎல் கோப்பைகள் - 15
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 04
  • குஜராத் டைட்டன்ஸ் - 01
  • இதர அணிகள் -10 

உத்தேச லெவன்

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே, மொயின் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷனா, மதிஷா பத்திரனா.

குஜராத் டைட்டன்ஸ் - விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, தசுன் ஷனகா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன்
  • ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - தீபக் சாஹர், முகமது ஷமி, ரஷித் கான் (துணை கேப்டன்), மத்திஷா பத்திரனா
Advertisement

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News