ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!

Updated: Tue, Apr 18 2023 20:26 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்றுபரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை  இந்தியன்ஸ் இடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோஹித் சர்மா 28 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இப்போட்டியில் 28 ரன்களை சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 6ஆயிரம் ரன்களைக் கடந்த 4ஆவது வீரர் எனும் புதிய மைல் கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார். 

இதற்கு முன்னதாக இந்திய வீரர் விராட் கோலி, ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் ஐபிஎல் தொடரில் 6ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர். தற்போது அந்த பட்டியளில் ரோஹித் சர்மாவும் இடம்பிடித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் 6ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் 

  • விராட் கோலி - 6844 ரன்கள்
  • ஷிகர் தவான் - 6477 ரன்கள் 
  • டேவிட் வார்னர் - 6109 ரன்கள்
  • ரோஹித் சர்மா - 6002 ரன்கள் 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை