ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறவுள்ள 47ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ஏற்கெனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போடியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றதால், அதற்கு பதிலடி கொடுக்கும் முனையில் கேகேஆர் அணி விளையாடவுள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - ராஜிவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

முன்னாள் சாம்பியனான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 3 வெற்றி, 5 தோல்வி என்று 6 புள்ளியுடன் பட்டியலில் 9ஆவது இடம் வகிக்கிறது. கடந்த ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்த ஐதராபாத் அணி அந்த வெற்றி வேட்கையை நீட்டிக்க தீவிரம் காட்டுகிறது.

கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சதம் அடித்த ஹாரி புரூக், அதன் பிறகு 4 ஆட்டங்களில் வெறும் 34 ரன் மட்டுமே எடுத்து தடுமாற்றம் கண்டுள்ளார். இந்த ஆட்டத்தின் மூலம் அவர் மீண்டும் பார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. மற்றபடி அபிஷேக் ஷர்மா, கேப்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

மறுபக்கம் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி எடுத்திருக்கிறது. எஞ்சிய 5 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளேஆப்' சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வாய்ப்பு மங்கி விடும். எனவே கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் கொல்கத்தா வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.

Advertisement

அந்த அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நிலையாக இல்லை. ஆண்ட்ரே ரஸலிடம் பழைய அதிரடியை பார்க்க முடியவில்லை. கேப்டன் ராணா, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங் ஆகியோரும் ரன்மழை பொழிய வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே ஹைதராபாத்திடம் 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய கொல்கத்தா அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என்பதை பார்க்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 09
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 15

உத்தேச லெவன் 

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கே), ஹாரி புரூக், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், அகில் ஹுசைன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: நாராயண் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கே), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், டேவிட் விஜே, சுனில் நரான், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஹென்ரிச் கிளாசென், ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - மயங்க் அகர்வால், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், அபிஷேக் சர்மா (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் (கேப்டன்), ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்தி, மயங்க் மார்கண்டே
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News