16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.

Advertisement

இந்த சூழலில் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற உள்ள, 58ஆவது லீக் போட்டியில் குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுக்கும் இப்போட்டி முக்கியமானது என்பதால் பெரும் எதிர்பர்ப்புகள் நிழவுகிறது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம்- ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு தொடரை அதிரடியாக தொடங்கினாலும், கடந்த சில போட்டிகளாக லக்னோ அணி பெரிதாக சோபிக்கவில்லை. வெற்றி, தோல்வி என மாறி மாறி முடிவுகளை பெற்று வருகிறது. கேப்டன் கே.எல். ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. க்ருணால் பாண்ட்யா தலைமையிலான அணியில் கைல் மேயர்ஸ், டி-காக், ஸ்டோய்னிஷ், நிக்கோலஸ் பூரான் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பினும், கடந்த சில போட்டிகளில் அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது குறிப்பிடத்தக்கது. 

அதோடு பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி லீக் போட்டியில், 227 ரன்களை வாரிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் டாப்-4க்குள் நுழைந்து, பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைதொடர முடியும். தற்போது 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் நீடிக்கிறது.

Advertisement

ஹைதரபாத் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி நான்கில் மட்டும் வெற்றி கண்டு, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றால் தான், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஓரளவிற்கு வாய்ப்பு உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே அந்த அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், கடைசி போட்டியில் வலுவான ராஜஸ்தான் அணியை ஹைதராபாத் வீழ்த்தியுள்ளது. இந்தவெற்றி தந்த உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் அந்த அணி களமிறங்குகிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 00
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 02
Advertisement

உத்தேச லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம் (கே), கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், தங்கராசு நடராஜன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கைல் மேயர்ஸ், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, குர்னால் பாண்டியா (கே), ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், அவேஷ் கான், யாஷ் தாக்கூர்.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், க்ளென் பிலிப்ஸ்
  • பேட்ஸ்மேன் - அபிஷேக் சர்மா
  • ஆல்ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஐடன் மார்க்ரம் (துணை கேப்டன்), கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா (கேப்டன்), மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள் - தாகராசு நடராஜன், ரவி பிஷ்னோய்.

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News