17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணைன் வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பில் சால்ட் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து சுனில் நரைனுடன், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். 

Advertisement

இவர்கள் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசியதுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிவரும் சுனில் நரைன் 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் கேகேஆர் அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மற்றுமே இழந்து 100 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி உள்ளது.

 

அதன்படி இன்னிங்ஸின் நான்காவது ஓவரை ஆவேஷ் கான் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்த பில் சால்ட் எதிர்கொண்டார். அதனை பில் சால்ட் நேரடியாக அடிக்க முயல, பந்தில் போதிய வேகம் இல்லாத காரணத்தால் அந்த ஷாட்டில் பெரிதளில் வேகமும் இல்லாமல் பந்துவீச்சாளரை நோக்கி சென்றது. அதனை அவேஷ் கானும் அருமையாக ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் இக்காணொளியானது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News