ஐபிஎல் 2024: மிட்செல் மார்ஷ் விலகல்; குல்பதின் நைபை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Fri, Apr 26 2024 13:45 IST
ஐபிஎல் 2024: மிட்செல் மார்ஷ் விலகல்; குல்பதின் நைபை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடையும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தற்போது தனது காயம் தீவிரமடைந்ததின் காரணமாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா திரும்பினார்.

முன்னதாக ஏப்ரல் 03ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயத்தை சந்தித்தார். இதனையடுத்து, அவர் அடுத்தடுத்த போட்டிகளை தவறவிட்டார். அதன்பின் மிட்செல் மார்ஷ் தனது மேல் சிகிச்சைக்காக தாயகம் திரும்பிய நிலையில், தற்போதுவரை அவர் காயத்திலிருந்து குணமடையாத காரணத்தால் நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகினார். 

ஏற்கெனவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டாப் ஆர்டர் சரிவர விளையாடாத நிலையில், மிட்செல் மார்ஷின் விலகல் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஆஃப்கானிஸ்தானின் குல்பதின் நைபை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் அவர் தனது அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ரிஷப் பந்த்(கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், யாஷ் துல், ஸ்வஸ்திக் சிகாரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், குமார் குஷாக்ரா, ரிக்கி புய், ஷாய் ஹோப், குல்பதின் நைப், பிரவின் துபே, அக்ஸர் படேல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், சுமித் குமார், அன்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, ஜேய் ரிச்சர்ட்சன், ரசிக் சலேம் தார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை