தொடக்கத்தில் நானும் சற்று பதட்டமாக தான் இருந்தேன் - மதீஷா பதிரனா!

Updated: Mon, Apr 15 2024 14:57 IST
தொடக்கத்தில் நானும் சற்று பதட்டமாக தான் இருந்தேன் - மதீஷா பதிரனா! (Image Source: Google)

 

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அந்தவகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்துமுதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் தூபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய எம்எஸ் தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர். மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரான ஆட்டநாயகன் விருதை வென்றார். இப்போட்டிக்கு பின் பேசிய அவர், “இப்போட்டியின் பவர்பிளே ஓவரின் போது நாங்கள் அதிகமான ரன்களை வழங்கியதால் நானும் சற்று பதட்டமாக தான் இருந்தேன்.  அதனால் நான் களத்தில் நிதனமாகவும், பொறுமையாக இருக்க வேண்டும் என எனக்கு நானே கூறிக்கொண்டேன்.  

நான் முடிவுகளை பற்றி பெரிதாக யோசிப்பவன் கிடையாது, எனது வேலையை சரியாக செய்வதில் மட்டுமே கவனத்தை செலுத்துனேன். எனது வேலையை சரியாக செய்தால் அனைத்தும் சரியாக நடக்கும் என நம்புவேன். போட்டியின் தன்மைக்கு ஏற்பவும், எதிரணி பேட்ஸ்மேனுக்கு ஏற்பவும் சில நேரங்களில் திட்டத்தை மாற்ற வேண்டியது அவசியம். மேலும் காந்த சில வாரங்களாக நான் சிறிய கயத்தை சந்தித்தேன். ஆனால் அணியில் உள்ள உதவியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் உதவியால் நான் தற்போது சிறப்பாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை