நடுக்கம், பதட்டம், உற்சாகம் இவை அனைத்தும் உள்ளது - ரிஷப் பந்த்!

Updated: Fri, Mar 22 2024 23:21 IST
நடுக்கம், பதட்டம், உற்சாகம் இவை அனைத்தும் உள்ளது - ரிஷப் பந்த்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தேதி முதல் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் தனது காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் அதன்பின் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் தான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவதற்கு  தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் ஒப்புதல் வழங்கினர்.

ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் நடப்பு சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கேப்டனாக ரிஷப் பந்த் மீண்டும் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கவுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷப் பந்த், “நீண்ட நாள்களுக்கு பின் கிரிக்கெட் விளையாடவுள்ளதால் நடுக்கம், பதட்டம், உற்சாகம் - இவை அனைத்தும் உள்ளது. ஆனால் அதே நேரத்தில், தொழில்முறை கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது முதல் ஆட்டத்தை நாளை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் நான் களத்தில் இறங்கும்போது, அது முற்றிலும் வித்தியாசமான உணர்வாக இருக்கும். என்னால் முடிந்தவரை பேட் செய்து ஒவ்வொரு நாளும் சிறப்பாக வர வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை, ஒரு நேரத்தில் ஒரு நாள் எடுத்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் எனது 100 சதவீதத்தைக் கொடுக்க விரும்புகிறேன்.

நான் ஒரு நீண்ட காயத்திற்குப் பிறகு திரும்பி வருகிறேன், பேட்டிங் பார்வையில் எனது நோக்கம் முடிந்தவரை பேட்டிங் பயிற்சி பெற வேண்டும். நான் கடந்த ஒன்றரை வருடங்கள் விளையாடாவிட்டாலும், ஷாட்களை விளையாடும் நிலைக்கு வருவதற்கு எனக்கு பேதிய கால அவகாசம் உள்ளது. ஒரு கிரிக்கெட் வீரராக எனது எண்ணம் நன்றாக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் செய்வதில் நான் சிறப்பாக இருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை, எல்லாவற்றையும் ரசிப்பது, மகிழ்ச்சியாக இருப்பது மற்றும் மைதானத்தில் 100 சதவீத உழைப்பை கொடுப்பதுதான் மிக முக்கியமான விஷயம் பல ஆண்டுகளாக ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்ததற்காகவும், நான் காயத்திலிருந்து குணமடைய வேண்டிய அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நாளை நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை