இணையத்தில் வைரலாகும் கேஎல் ராகுலின் ஒற்றைக் கை கேட்ச் - காணொளி!

Updated: Tue, Apr 23 2024 20:19 IST
இணையத்தில் வைரலாகும் கேஎல் ராகுலின் ஒற்றைக் கை கேட்ச் - காணொளி! (Image Source: Google)

சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் டேரில் மிட்செல் சேர்க்கப்பட்டார். 

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஜிங்கியா ரஹானே - கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே அஜிங்கியா ரஹானே தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல்லும் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 ரன்களுக்குள்ளேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத்தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரவீந்திர ஜடேஜா இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் பிடித்த் கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதன்பின் இப்போட்டியின் முதல் ஓவரை மேட் ஹென்றி வீசா அந்த ஓவரின் கடைசி பந்தை அஜிங்கியா ரஹானே எதிர்கொன்டார். அந்த பந்தை அவர் டிரைவ் அடிக்க முயற்சி செய்ய, அது பேட்டில் எட்ஜாகி சென்றது. இதனை சரியாக கணித்த விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் டைவ் அடித்து பந்தை பிடித்தார். இதனால் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரஹானே பெவிலியனுக்கு திரும்பினார். இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை