கேஎல் ராகுல் அணியில் இணைவது எப்போது? - ஜஸ்டின் லங்கர் பதில்!

Updated: Wed, Mar 20 2024 20:49 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் இருமுறையும் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இரண்டு முறையும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறியது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. 

கடந்தாண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிய கேஎல் ராகுல் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடுவதுடன் அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் போது காயத்தை சந்தித்த தொடரிலிருந்து விலகினார். அதன்பின், லண்டன் சென்று சிகிச்சை மேற்கொண்டு நாடு திரும்பிய அவர், என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் உடற்தகுதியை ஏட்டியுள்ளார். 

இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் கேஎல் ராகுல் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய பயிற்சியை ஆட்டத்தில் கேஎல் ராகுல் லக்னோ அணியுடன் இணைவார் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கேஎல் ராகுலைப் பொறுத்தவரை, அவர் இன்று லக்னோ வந்தடைந்து இரவு பயிற்சி ஆட்டத்திற்காக இங்கு வரவிருந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் வரவிருந்த விமானம் தாமதமானது. இதனால் அவர் இன்று இரவு மைதானத்திற்கு வந்தடைவார் என எதிர்பார்க்கிறோம். அநேகமான கேஎல் ராகுல் நாளைய தினம் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறேன். எல்லோரும் அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கேப்டன் எங்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை