ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது.

Advertisement

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்கள் எடுத்த நிலையில் பிரித்வி ஷாவும் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 18 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ரிஷப் பந்தும் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த ஸ்கோரை எட்டியது. சிஎஸ்கே தரப்பில் மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

 

இந்நிலையில் இப்போட்டியின் போது சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா தனது அடுத்தடுத்த யார்க்கர்கள் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்படி அதிரடியாக விளையாட நினைத்த மிட்செல் மார்ஷை 18 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸை ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து தனது அபார யார்க்கர் மூலம் வெளியேற்றினார். இந்நிலையில் மதீஷா பதிரனா யார்க்கர் வீசி விக்கெட் வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News