இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் ஐபிஎல் தொடங்கியது முதல் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்துவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

அதன்படி கார் விபத்தில் சிக்கி ஓராண்டு பிறகு கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ள ரிஷப் பந்த், நடப்பு ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரும் உத்வேகத்தை வழங்கியுள்ளது. இருப்பினும் நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியை விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதிவரை போராடியும் தோல்வியைத் தழுவியுள்ளது. 

Advertisement

இதனால் இனிவரும் போட்டிகளில் வெற்றிப்பாதைக்கும் திரும்பும் முயற்சியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது. 

அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். கடந்த சீசனில் காயம் காரணமாக விலகிய ஆண்ட்ரிச் நோர்ட்ஜே காயத்திலிருந்து மீண்டும், முழு உடற்தகுதியுடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் முதலாவது போட்டியின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக போட்டியின் பாதியிலிருந்தே விலகினார். இதனால் இனிவரும் போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துவரும் நிலையில், அவரது இடத்தை நிரப்பும் விதமாக ஆண்ட்ரிச் நோர்ட்ஜே அணியில் இணைந்திருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ரிஷப் பந்த்(கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், யாஷ் துல், ஸ்வஸ்திக் சிகாரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், குமார் குஷாக்ரா, ரிக்கி புய், ஷாய் ஹோப், பிரவின் துபே, அக்ஸர் படேல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், சுமித் குமார், அன்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, ஜேய் ரிச்சர்ட்சன், ரசிக் சலேம் தார்

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News