அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

Advertisement

இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ஷுப்மன் கில் 50 பந்துகளில் தனது 4ஆவது சதத்தை பதிவுசெய்ய, மறுபக்கம் சாய் சுதர்ஷன் 50 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் சாய் சுதர்ஷன் 103 ரன்களுக்கும், ஷுப்மன் கில் 104 ரன்களுக்கும் என அடுத்தடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இறுதி பந்தில் ஷாருக் கானும் 2 ரன்களுக்கு அவுட்டாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் துஷார் தேஷ் பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - மொயீன் அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடகக் வீரர்களாக களமிறங்கிய ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகள் வரிசையிலும் இடம்பிடித்துள்ளனர். 

அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் வரிசையில் இந்த ஜோடி 4ஆம் இடத்தை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் ஆர்சிபி அணியின் விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் இணை 229 மற்றும் 215 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் இரு இடங்களையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் குயின்டன் டி காக், கேஎல் ராகுல் இணை இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

ஐபிஎல் தொடரில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி

  • 229 - ஏபி டி வில்லியர்ஸ் & வி கோலி - 2016 (2ஆவது விக்கெட்டிற்கு)
  • 215* - ஏபி டி வில்லியர்ஸ் & வி கோலி -  2015 (2ஆவது விக்கெட்டிற்கு)
  • 210* - குயின்டன் டி காக் & கேஎல் ராகுல் - 2022 (முதல் விக்கெட்டிற்கு விக்கெட்டுகள்)
  • 210 - ஷுப்மன் கில் & சாய்சுதர்சன் - 2024 (முதல் விக்கெட்டிற்கு)
  • 206 - கில்கிறிஸ்ட் & ஷான் மார்ஷ் - 2011 (2ஆவது விக்கெட்டிற்கு)
  • 204* - கிறிஸ் கெய்ல் & விராட் கோலி - 2012 (2ஆவது விக்கெட்டிற்கு)
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News