ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

Advertisement

அதிலும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடரின் மற்ற அணிகளும் தங்களது லீக் சுற்றுக்கு தயாராகும் வகையில் பயிற்சியை தொடக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர். 

Advertisement

அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் ஐடன் மார்க்ரம் தலைமையில் களமிறங்கிய ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் வீரர்கள் மீனி ஏலத்தில் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஹைதராபாத் அணி அவரை தற்போது கேப்டனாகவும் நியமித்துள்ளது. 

இந்நிலையில் மீண்டும் ஒரு மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த சீசனில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயின் தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கான மாற்று பயிற்சியாளரை ஹைதராபாத் அணி தேடி வந்தது. 

அந்த வகையில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஃபிராங்க்ளினை நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்காக 2001ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை விளையாடி ஃபிராங்க்ளின், 31 டெஸ்ட், 110 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையாடி 2,600-க்கும் மேற்பட்ட ரன்களையும், 183 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

அதுமட்டுமின்றி ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் ஐபிஎல் தொடரில் கடந்த 2011 -12 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News