கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)  தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று  நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரை கேகேஆர் அணி தரப்பில் கலீல் அஹ்மத் வீச அந்த ஓவரில் இரு பேட்டர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். அதன்பின் இரண்டாவது ஓவரில் பில் சால்ட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரும் மெல்லமெல்ல உயர்த்தொடங்கியது. 

Advertisement

ஆனால் அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய சுனில் நரைன் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் கேகேஆர் அணியின் ஸ்கோரும் 8 ஓவர்களில் 100 ரன்களைத் தாண்டியது. 

 

இந்நிலையில் இப்போட்டியின் நான்காவது ஓவரை இஷாந்த் சர்மா வீச அதனை எதிர்கொண்ட சுனில் நரைன் அந்த ஒரு ஓவரில் மட்டும் அடுத்தடுத்து 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசி 26 ரன்களைக் குவித்தார். இந்நிலையில் இஷாந்த சர்மா ஓவரில் சுனில் நரைன் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News