ஐபிஎல் 2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் கிளென் மேக்ஸ்வெல்!

Updated: Wed, Apr 30 2025 20:41 IST
ஐபிஎல் 2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் கிளென் மேக்ஸ்வெல்!
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் காயம் காரணமாக விளையாடவில்லை என்றும், அவருக்கு பதிலாக சுர்யாஷ்ன் ஷேட்ஜ் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விரலில் ஏற்பட்ட எழும்புமுறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் டாஸ் நிகழ்வின் போதே மேக்ஸ்வெல்லின் காயம் குறித்து தெரிவித்ததுடன், அவருக்கான மாற்று வீரர் குறித்து இன்னும் சிந்திக்கவில்லை என்பதை தெரிவித்திருந்தார். இதன் மூலம் கிளென் மேக்ஸ்வெல்லின் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதும் உறுதியகியுள்ளது. அதேசமயம் அவரின் ஐபிஎல் பயணமும் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் கிளன் மேக்ஸ்வெல் விளையாடிய 7 போட்டிகளிலும் சேர்த்து பேட்டிங்கில் 8 என்ற சராசரியில் 97 என்ற ஸ்டிரைக் ரேட்டில் மொத்தமாகவே 48 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு கடந்த சில ஐபிஎல் சீசன்களாகவே கிளென் மேக்ஸ்வெல்லின் ஐபிஎல் ஃபார்ம் மிக மோசமாக இருந்துள்ளது. 

தற்போது 36 வயதாகும் கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இதுவரை 141 போட்டிகளில் விளையாடி 155 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 1817 ரன்களை சேர்த்துள்ளது. இதில் 18 அரைசதங்களும் அடங்கும். பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஒட்டுமொத்தமாக 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இனிவரும் ஐபிஎல் சீசன்களில் கிளென் மேக்ஸ்வெல்லை அணிகள் தேர்வு செய்வது கேள்விக்குறி தான் என்று கருதபடுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்எஸ் தோனி(கேப்டன்), நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா

இம்பேக்ட் வீரர்கள் - அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ், ஜேமி ஓவர்டன்

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

Also Read: LIVE Cricket Score

இம்பேக்ட் வீரர்கள் -பிரப்சிம்ரன் சிங், முஷீர் கான், விஜய்குமார் வைஷாக், சேவியர் பார்ட்லெட், பிரவீன் துபே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை