ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 65ஆவது லீக் போட்டியில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தியது. 

Advertisement

லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் ஹென்ரிச் கிளசென் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய அனிகேத் வெர்மா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 26 ரன்களுக்கும், நிதீஷ் ரெட்டி 4 ரன்களுக்கும், அபினவ் மனோகர் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். 

Also Read: LIVE Cricket Score

மேலும் அவருடன் இணைந்த கேப்டன் பாட் கம்மின்ஸும் அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை அதிகரித்தார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷான் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 94 ரன்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆர்சிபி அணி தரப்பில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News