ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைக் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 43 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களையும் சேர்த்து அசத்தினர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நேஹால் வதேரா 62 ரன்களையும், கிளென் மேக்ச்வெல் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “உண்மையைச் சொல்லப் போனால், நான் 180-185 ரன்கள் தான் இலக்காக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் இங்கு சேஸிங் செய்வது நல்லது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் எங்களால் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. தொடரின் ஆரம்பத்திலேயே நாங்கள் எங்களின் தவறுகளை கண்டறிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது ஒரு நல்ல பிட்ச், பந்து கொஞ்சம் பிடித்துக் கொண்டிருந்தது, நாங்கள் அவர்களுக்கு அதிக வேகத்தைக் கொடுக்கவில்லை. நாங்கள் அதை பயன்படுத்தி பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முயற்சித்திருக்கலாம். ஆனால் அதனை செய்ய நாங்கள் தவறிவிட்டோம். இந்த ஆட்டத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். மேற்கொண்டு நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படாதது குறித்து நிச்சயமாக ஆலோசிக்க வேண்டும். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஏனெனில் எங்களின் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். அதனால் அடுத்து களமிறங்கிய பேட்டர்களுக்கு அது அழுத்தத்தை உருவாக்கியது. நேஹல் வதேரா அழுத்ததின் கீழ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் தொடக்கத்தில் உங்களை எழுப்ப ஒரு சிறிய தடை தேவை. இந்த இழப்பு நன்றாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன், நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News